Tuesday, May 31, 2016

வட இந்து மகளிர் கல்லூரியின் பாடசாலைக் கீதத்தை எழுதியவர் கமலா பெரியதம்பியே

நேற்று முன்தினம் கனடாவில் காலமான பிரபல எழுத்தாளரும் ஆசிரியருமான கமலா பெரிய தம்பி அவர்களே வட இந்து மகளிர் கல்லூரியின் பாடசாலைக் கீதத்தை எழுதியவர் ஆவார். இது 1954 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. கமலா பெரியதம்பி வட இந்து மகளிர் பாடசாலையின் முன்னாள் ஆசிரியை ஆவார்.
இவரால் எழுதப்பட்ட பாடசாலைக் கீதம் வருமாறு
பல்லவி
வட இந்து மகளிர் கல்லூரி
வாழிய வாழி நீடுழி - (வட)
அனுபல்லவி
ஆழி யிறைவன் அருள்நிதம் பாடி
பாழ்வினை யகலப் பரிவுடன் பயிலும் - (வட)
சரணம்
ஈழநன் நாடாம் எங்கள் பொன்னாட்டில்
திரு வளர்ந்தோடும் பருத்தித்துறையாம்
தாழ்விலாத் தலத்தில் தவநெறிச் சங்கம்
தமிழ்மகள் மாற்புறத் தரணியி லருளிய - (வட)
செந்தமிழ் முதலாஞ் சிறந்த நற்கலையும்
சிந்தையை யேற்றும் நந்திரு மறையும்
எந்தத் துறையிலும் தேர்ந்திடப் பயிற்சி
தந்திடும் தர்மம் தனதெனச் சாற்றும் - (வட)
மங்கையர் பண்பும் இங்குநாம் பயின்று
நங்குலம் தழைக்க நாடும் செழிக்கப்
பொங்கிடு மன்பும் மங்கிடா வீரமும்
எங்கணும் சேவைகள் செய்திட வளரும் - (வட)
பன்னரும் பெருமைசேர் பரந்தநல் விண்ணே
பரிதியும் மதியு மின்றேல் இருட்புண்ணே
அன்பெனும் நிலவைப் பொழிபவள் பெண்ணே
இன்பக் கதிரொளி காட்டிடுங் கண்ணே
நன்மணி விளக்கே மாற்றுயர் பொன்னே
மண்ணுயர் சேவையை தன்னுயிர் என்னும் - (வட)

Quelle - http://www.valvettithurai.org/vada-hindu-ladies-college-school-anthem-was-written-by-kamala-periyathambi-6369.html

No comments: