Monday, May 23, 2011

பாடசாலைக் கீதம்

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி பாடசாலைக் கீதம்

பல்லவி
வட இந்து மகளிர் கல்லூரி
வாழிய வாழி நீடுழி - (வட)

அனுபல்லவி
ஆழி யிறைவன் அருள்நிதம் பாடி
பாழ்வினை யகலப் பரிவுடன் பயிலும் - (வட)

சரணம்
ஈழநன் நாடாம் எங்கள் பொன்னாட்டில்
திரு வளர்ந்தோடும் பருத்தித்துறையாம்
தாழ்விலாத் தலத்தில் தவநெறிச் சங்கம்
தமிழ்மகள் மாற்புறத் தரணியி லருளிய - (வட)

செந்தமிழ் முதலாஞ் சிறந்த நற்கலையும்
சிந்தையை யேற்றும் நந்திரு மறையும்
எந்தத் துறையிலும் தேர்ந்திடப் பயிற்சி
தந்திடும் தர்மம் தனதெனச் சாற்றும் - (வட)

மங்கையர் பண்பும் இங்குநாம் பயின்று
நங்குலம் தழைக்க நாடும் செழிக்கப்
பொங்கிடு மன்பும் மங்கிடா வீரமும்
எங்கணும் சேவைகள் செய்திட வளரும் - (வட)

பன்னரும் பெருமைசேர் பரந்தநல் விண்ணே
பரிதியும் மதியு மின்றேல் இருட்புண்ணே
அன்பெனும் நிலவைப் பொழிபவள் பெண்ணே
இன்பக் கதிரொளி காட்டிடுங் கண்ணே
நன்மணி விளக்கே மாற்றுயர் பொன்னே
மண்ணுயர் சேவையை தன்னுயிர் என்னும் - (வட)

ஆக்கம் - திருமதி கமலா பெரியதம்பி (முன்னாள் ஆசிரியை), 1954

No comments: